News March 29, 2024
மதிமுக போட்டியிடும் சின்னம் நாளை அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் சின்னம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு, மதிமுகவின் பம்பரம் சின்னம் கிடைக்காததால் புதிய சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அது என்ன சின்னம் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என துரை வைகோ கூறியுள்ளார்.
Similar News
News November 10, 2025
கடலில் மூழ்கிய படகு; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்

மியான்மரின் புத்திடாவுங்கிலிருந்து 300 குடியேறிகளுடன் புறப்பட்ட படகு தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே கடலுக்குள் மூழ்கியது. இச்சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி மாயமானது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல 2021-ல் மலேசியாவில், புலம்பெயர்ந்தோர் சென்ற கப்பல் மூழ்கியதால் 20 பேர் இறந்தனர்.
News November 10, 2025
SSLC தகுதி போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் 542 வேலை!

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10-வது, ITI தேர்ச்சி. வயது வரம்பு: 18 – 25 வரை. சம்பளம்: ₹18,000 – ₹63,200 வரை கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News November 10, 2025
FLASH: சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தைகள்!

கடந்த வாரத்தில் தொடர் சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று(நவ.10) உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 83,404 புள்ளிகளிலும், நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 25,552 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Asian Paints, ONGC, Titan Company, Reliance உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


