News April 6, 2024
மதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்.19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. மேலும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், இன்று மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது.
Similar News
News March 23, 2026
இந்தியாவின் ஆபத்பாந்தவனாக கைகொடுத்த அர்ஜென்டினா

ஈரான் மீதான் இஸ்ரேல் போரால் எரிவாயு இறக்குமதி தடைபட்டு இந்தியா தடுமாறி வருகிறது. இந்தியா தனது LPG தேவைக்கு வளைகுடா நாடுகளின் இறக்குமதியையே 90% சார்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு ஆப்த்பாந்தவனாக மாறி கைகொடுத்துள்ளது அர்ஜெண்டினா. அதாவது கடந்த 3 மாதங்களில் சுமார் 50,000 டன் LPG-யை இந்தியாவிற்கு விநியோகித்துள்ளது அர்ஜென்டினா. இது கடந்த ஆண்டு பெறப்பட்ட 22,000 டன்களை விட இரு மடங்கு அதிகமாகும்.
News March 23, 2026
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் இவரா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி குறித்த Ex வீரர் ஸ்ரீகாந்தின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், MI அணியில் டி20 WC வென்ற ரோஹித் சர்மா & சூர்யகுமார் யாதவ் என்ற 2 கேப்டன்கள் உள்ளனர்; ஆனால், அவர்கள் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறார்கள் என விமர்சித்துள்ளார். ஹர்திக் நல்ல கேப்டன்தான், ஆனால் அப்பொறுப்பை சூர்யாவிடம் விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News March 23, 2026
கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி.. மத்திய அரசின் ஹேப்பி நியூஸ்

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <


