News May 13, 2024
கொட்டும் கனமழையால் போட்டி தாமதம்

ஐபிஎல் தொடரின் 63ஆவது லீக் போட்டியில் இன்று குஜராத் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் போட்டியில் நடக்க இருந்த சூழலில், அங்கு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மைதானம் முழுவதும் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து நீடித்து வருவதால் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் சோகத்துடன் மைதானத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
Similar News
News March 17, 2026
வீட்டில் தங்க நகை இருக்குதா.. எச்சரிக்கை

TN-ல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், வீட்டில் அதிகளவில் தங்கம் வைத்திருந்தால் சிக்கல் எழுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வருமான வரி விதிப்படி, திருமணமான பெண்கள் 500 கிராம், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம், ஆண்கள் 100 கிராம் வரை ஆவணங்களின்றி தங்கத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இந்த அளவுக்கு மேல் வீட்டில் தங்கம் வைத்திருந்தால், ரெய்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.
News March 17, 2026
ரஜினி பதிவில் முற்றுப்புள்ளி.. முட்டிமோதும் ரசிகர்கள்

ரஜினிகாந்த் பற்றி ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு <<19405631>>ரஜினி<<>> பதிலடி கொடுத்திருந்தார். இதில் கவனிக்கத்தக்க வகையில், தனது X பக்கத்தில், ‘ . ‘ என்று மட்டும் குறிப்பிட்டு அறிக்கையை ரஜினி வெளியிட்டிருந்தார். இதனை பகிர்ந்துவரும் அவரது ரசிகர்கள், ‘தலைவர் சம்பவம் வேற மாதிரி’ என கூறி வருகின்றனர். முன்னதாக, அடுத்த சூப்பர் ஸ்டார், காக்கா – கழுகு கதை என ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
News March 17, 2026
மக்களுக்கு பாதுகாப்பில்லாத காட்டாட்சிக்கு முடிவு: TTV

₹5,000 மூலம் வாக்குகளை விலைக்கு வாங்க நினைத்த திமுகவின் ஆணவம், காட்டாட்சிக்கு முடிவு கட்ட ஏப்.23-ம் தேதிக்காக மக்கள் காத்திருப்பதாக TTV தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் பேசிய அவர், TN-ல் தினந்தோறும் கொலை, வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்க கஞ்சா புழக்கமே காரணம் என்றார். அதிமுக ஆட்சியில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு முகவரியை மாற்றியவர்களுக்கு அரசியல் எதிர்காலம் காணாமல் போகும் என OPS-ஐ சாடினார்.


