News March 28, 2024
249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்

பிரேசிலில் 249 குழந்தைகளை பெற்ற ‘பாடா சேகா’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 1828ஆம் ஆண்டு பிறந்த இவர், 7 அடி உயரமும், திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை, மற்ற அடிமைப் பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் பாடா சேகா 249 பிள்ளைகளை பெற்றிருக்கிறார். 1959ஆம் ஆண்டு தன்னுடைய 130ஆவது வயதில் இவர் காலமானார்.
Similar News
News November 24, 2025
₹20 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் காதல் வாட்ச்!

1912-ல் டைட்டானிக் கப்பலில் பலியான தொழிலதிபர் இசிடோர் ஸ்ட்ராஸ்க்கு சொந்தமான தங்க பாக்கெட் வாட்ச், ஏலத்தில் சுமார் ₹20 கோடிக்கு விற்று சாதனை படைத்துள்ளது. கப்பல் மூழ்கும் போது, ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி ஐடா ஒருவரையொருவர் பிரிய மறுத்து உயிரிழந்த காதல் ஜோடி. அவர்களது காதல் சின்னமாக விளங்கிய இந்த வாட்ச், தற்போது டைட்டானிக் நினைவு பொருள்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
News November 24, 2025
தற்குறி Vs ஆச்சரியக்குறி: அமைச்சர் ரகுபதி புது விளக்கம்

தவெக தொண்டர்கள் <<18366063>>தற்குறி<<>> அல்ல, ஆச்சரியக்குறி என விஜய் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ரகுபதி, விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் இலக்கு தேர்தல் குறிதான் என்றும் அவர் கூறியுள்ளார். யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என்றும், யாரோடும் எங்களுக்கு பகை இல்லை எனவும் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.
News November 24, 2025
போனை திருடியவரை இப்படி ஈஸியா கண்டுபிடிக்கலாம்

உங்கள் போன் திருடுபோனால் எளிதில் கண்டுபிடிக்க சில ஆப்கள் உள்ளன. Bitdefender, Cerberus, Prey ஆகிய செயலிகளில் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்யுங்கள். அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, பர்மிஷன்களை கொடுத்துவையுங்கள். உங்கள் போனை திருடியவர் SIM-ஐ மாற்றினாலோ, SWITCH OFF செய்ய முயற்சித்தாலோ (அ) தப்பான Password-ஐ உள்ளிட்டாலோ இச்செயலிகள் உடனடியாக Selfie எடுப்பதோடு, லொகேஷனையும் உங்களுக்கு SHARE செய்யும்.


