News April 12, 2025
மரங்களின் நாயகன் மறைவு: PM மோடி இரங்கல்

<<16071420>>‘வனஜீவி’ ராமைய்யாவின் மறைவிற்கு<<>> PM மோடி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ராமைய்யா, இயற்கையின் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் என்று கூறியுள்ள மோடி, இந்த பூமிப்பந்தை பசுமைக் கோளாக மாற்ற இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்று கூறி, அன்னாரது குடும்பத்தினருக்கு தன் இரங்கலை X-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News November 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 529 ▶குறள்: தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். ▶பொருள்: உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.
News November 24, 2025
சிந்து இந்தியாவுடன் இணையலாம்: ராஜ்நாத் சிங்

குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கை பெறுவதற்காக, அவர்களை திருப்திபடுத்தும் அரசு (காங்.,), சிந்துவில் இருந்து வந்த அந்நாட்டு (பாக்.,) சிறுபான்மையினரை (இந்துக்கள்) அவமானப்படுத்தியதாக ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினார். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இல்லாமல் இருக்கலாம் என்ற அவர், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்றும் கூறினார்.
News November 24, 2025
துபாய் ஏர் ஷோ.. அமெரிக்க கேப்டன் அதிருப்தி

தேஜஸ் விமான விபத்தில் நமன்ஷ் சியாலுக்கு உயிரிழந்த பிறகும் துபாய் ஏர் ஷோ தொடர்ந்தது குறித்து அமெரிக்க F-16 குழுவின் கேப்டன் டெய்லர் ஹிஸ்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார். நமன்ஷுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தங்களது குழு இறுதி சாகசத்தை நிகழ்த்தாமல் வெளியேறியதாக அவர் பேசியுள்ளார். விபத்தை தொடர்ந்து, ஏர் ஷோ தொடரப்பட்டு அடுத்தடுத்த சாகசங்களை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.


