News December 26, 2024

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது

image

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரமே தமிழகத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மீண்டும் மீண்டும் யு டர்ன் அடித்து கடலுக்குள் சென்றது. தற்போது, ஒருவழியாக இது வலுவிழந்திருக்கிறது. இனி, தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்.

Similar News

News September 11, 2025

ராமதாஸ் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது: கே.பாலு

image

அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை என கே.பாலு தெரிவித்துள்ளார். பாமக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மட்டுமே நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறிய அவர், ராமதாஸ் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணிதான் பாமக தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அவருக்குதான் அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News September 11, 2025

கொசுக்களுக்கு விரும்பிய ரத்த வகை எது தெரியுமா?

image

அனைவரையும் கொசு கடிக்கிறது என்றாலும், ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் குறிவைத்து கடிக்க அவர்களின் ரத்த வகை தான் காரணம் என்பது தெரியுமா? கொசு குறிவைத்து கடிப்பதில் முதல் இடத்தில் ‘O’ வகை பிளட் குரூப்பினரும், 2-வது இடத்தில் ‘B’ வகையினரும் உள்ளனர். இவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் அதிகமாக காணப்படும் லாக்டிக் ஆசிட் கொசுக்களை ஈர்க்கும் மணத்தை கொண்டுள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

News September 11, 2025

கவிதாவை போன்று அன்புமணி நீக்கம்: ராமதாஸ் விளக்கம்

image

BRS கட்சியில் இருந்து தனது மகளான கவிதாவையே சந்திரசேகர் ராவ் நீக்கியது போல், தன்னுடைய மகன் அன்புமணியை நீக்கியுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார். முன்னதாக, தனது சகோதரனுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தது, டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றது ஆகியவற்றின் கோபத்தை காட்டமாக வெளிப்படுத்தியதால், கவிதா BRS கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதேபோல், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக அன்புமணி நீக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!