News October 21, 2025
ஏமாற்றிய காதலன்.. சூனியக்காரியை நாடிய காதலி

பிரேக்-அப் செய்த காதலனை, பழிவாங்க காதலி ஒருவர் சூனியக்காரியின் உதவியை நாடிய சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது. இப்பிரச்னையில், சூனியம் வைக்க வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்த சூனியக்காரி, மனநல சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்த தீர்வு என்று அப்பெண்ணுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இவரின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகின்றனர். நீங்கள் காதல் தோல்வியில் இருந்து மீண்டது எப்படி? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 22, 2025
இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுார், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வீட்டில் பத்திரமாக இருங்கள்..!
News October 22, 2025
டிரம்ப் எச்சரிக்கைக்கு PM மவுனம் காப்பது ஏன்? காங்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கும் நிலையில் PM மோடி அமைதி காப்பது ஏன் என ஜெய்ராம் ரமேஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் டிரம்புக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்காமல் ஏன் வெளியுறவுத்துறை பின் மோடி மறைந்துகொள்கிறார் எனவும் காங்கிரஸ் சாடியுள்ளது. இங்கு மட்டும் சத்தமாக பேசும் மோடி வெளிநாட்டினரிடம் அடங்கி போவதாகவும் காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
News October 22, 2025
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் 18 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.