News May 15, 2024
ரசிகர்களின் அன்பு நெகிழ்ச்சியைத் தருகிறது

RCB-க்கு எதிரான போட்டியில் தான் விளையாடி இருந்தால், ப்ளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கும் என டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், நிறைய நம்பிக்கையுடன் இந்த சீசனில் களமிறங்கினோம் என்றும், வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் நினைத்ததை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும் கூறினார். மேலும், ரசிகர்கள் காட்டிய அன்பு நெகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News March 27, 2026
வாணியம்பாடியில் உடல் தூக்கி வீசப்பட்டு பலி!

வாணியம்பாடி ரயில் நிலையம் விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று (மார்ச்.26) தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் மூதாட்டி உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 27, 2026
மத்திய மண்டலத்தில் 28 தொகுதிகளில் அதிமுக

மத்திய மண்டலத்தில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் அதிமுக 28 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இவற்றில் 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 23 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக வலுவாக உள்ள தஞ்சை, திருவாரூரில் பாஜகவும், கும்பகோணத்தில் தமாகா தாமரை சின்னத்திலும் களம்காண உள்ளனர். <<-se>>#TNELECTION2026<<>>
News March 27, 2026
பாஜகவை காலி செய்ய திமுக – அதிமுக ஒப்பந்தம்: சீமான்

தமிழகத்தில் பாஜகவை வீழ்த்த அதிமுக – திமுக ஒப்பந்தம் செய்துள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட சீமான், திமுக அமைச்சர்கள் களம் காணும் தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாகவும், தமிழகத்தில் பாஜக வரக்கூடாது என இரு கட்சிகளும் திட்டமிட்டு வேலை செய்தாக தெரிவித்துள்ளார். மேலும், இரு கட்சிகளுக்கும் மதுபான ஆலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதாக கூறினார். <<-se>>#TNELECTION2026<<>>


