News April 19, 2025
இரட்டை இலை மேலே தாமரை மலரும்: நயினார்

தமிழக பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக கூட்டணி தொடர்பான கருத்துக்களை யாரும் தெரிவிக்க வேண்டாம் எனவும் தலைமையின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரும் தேர்தலில், இரட்டை இலை மேலே தாமரை மலரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.
Similar News
News April 19, 2025
திருமணத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமில்லை: DL HC

திருமணத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமில்லை என்று டெல்லி ஹைகோர்ட் (DL HC) தெரிவித்துள்ளது. மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி, கணவர் தொடுத்த மேல்முறையீட்டு மனு மீது HC தீர்ப்பளித்தது. அப்போது, ஏற்கெனவே இதேபோன்ற இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றம் திருமணத்தை மீறிய உறவு தனிநபர் ஒழுக்கம் சார்ந்த பிரச்னை, கிரிமினல் குற்றமில்லை என கூறியிருப்பதை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தது.
News April 19, 2025
மீண்டும் வருகிறது ‘சங்கமித்ரா’

படு ஜோராக தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட முக்கியமான படங்களுள் சங்கமித்ராவும் ஒன்று. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இப்படம் பிரமாண்டமாக உருவாகும் என்று 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்திருக்கும் சுந்தர்.சி, அடுத்த ஆண்டு இப்படத்தின் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
News April 19, 2025
2026 தேர்தலில் கடும் போட்டி: மாலினி பார்த்தசாரதி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 திராவிட கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று மாலினி பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். இபிஎஸ்சை அவர் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2026 தேர்தலில் வெற்றி உறுதி என்று இபிஎஸ் நம்புகிறார், சட்டப்பேரவைத் தேர்தலில் காத்திருக்கும் போட்டிக்காக நன்கு தயார் நிலையில் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.