News April 6, 2024

புத்திசாலித்தனமாக தங்கையை பாதுகாத்த சிறுமி

image

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுமிகள் அலெக்ஸா கருவியின் உதவியுடன் தப்பித்துள்ளனர். நிகிதா என்ற சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த குரங்குகள், சமயலறையில் இருந்த பொருட்களை அங்கும் இங்குமாக வீசத் தொடங்கியுள்ளன. இதனால் சிறுமியின் தங்கை பயந்துபோன நிலையில், புத்திசாலித்தனமாக யோசித்த நிகிதா, அலக்ஸாவை குரைக்கக் கூறியுள்ளார். அலக்ஸாவில் இருந்து வந்த நாயின் சத்தத்தை கேட்ட குரங்குகள் அங்கிருந்து பயந்து ஓடியுள்ளன.

Similar News

News January 3, 2026

இந்த வார ஓடிடி ட்ரீட்!

image

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க அரை டஜன் படங்கள் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. *பிரபுசாலமனின் ‘கும்கி 2’ : ஜன.2, அமேசான் பிரைம் *விக்ராந்தின் ‘LBW’வெப்சீரிஸ்: ஜன.2, ஜியோ ஹாட்ஸ்டார் *’Stranger Things 5’: நெட்ஃபிளிக்ஸ் *நரைனின் ‘EKO’: ஜன.2, நெட்பிளிக்ஸ் *சதீஷ் தன்வியின் ‘Innocent’: ஜன.2, அமேசான் பிரைம் * ரோஷன் கார்த்திக்கின் ‘மெளக்லி 2025’: ஜன.1, ஈடிவி வின்

News January 3, 2026

வரிவிதிப்பால் அமெரிக்கா செழிக்கிறது: டிரம்ப்

image

வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடந்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை கண்டிராத அளவில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் வரிவிதிப்பு பயனளித்துள்ளதாக அவர் SM-ல் குறிப்பிட்டுள்ளார். தங்களது நாட்டை நியாயமற்ற முறையில் நடத்திய இதர நாடுகளுக்கு வரிவிதிக்கும் திறனை இழந்திருந்தால், அமெரிக்காவுக்கு பயங்கரமான இழப்புக்கு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News January 3, 2026

T20 WC: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

image

டி20 WC-க்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் தலைமையிலான அணியில் போஸ்ச், பிரேவிஸ், டி காக், டி ஜோர்ஜி, டோனோவன், யான்சென், லிண்டே, கேஷவ் மகாராஜ், மபாகா, மில்லர், இங்கிடி, நார்ட்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித் ஆகியோர் உள்ளனர். அதிரடி வீரர்கள் ரிக்கல்டன், ஸ்டப்ஸ் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது. 2024 WC ஃபைனலில் இந்தியாவிடம் நூலிழையில் தோற்ற SA, இம்முறை சாம்பியனாகும் முனைப்பில் உள்ளது.

error: Content is protected !!