News December 6, 2024
சிங்கம் களமிறங்கிருச்சே..!

அமேசான் நிறுவனத்தை விட்டு வெளியேறி 3 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அதன் செயல்பாடுகளில் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இணைந்துள்ளார். AI-யில் ஆதிக்கம் செலுத்தும் கூகுள், மைக்ரோசாஃப்ட், OpenAI நிறுவனங்களுக்கு போட்டியாக, சக்தி வாய்ந்த சூப்பர் கம்யூட்டர் உருவாக்கத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, அவரது Blue Origin விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கவனம் செலுத்த, அமேசான் CEO பொறுப்பில் இருந்து அவர் விலகினார்.
Similar News
News December 5, 2025
நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பொழியுதா? கமெண்ட் பண்ணுங்க
News December 5, 2025
ராசி பலன்கள் (05.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 5, 2025
பிரம்மாண்டமாக பிரகாசிக்கும் கடைசி முழுநிலவு

2025-ம் ஆண்டின் கடைசி முழுநிலவு உலகம் முழுவதும் காணப்பட்டு வருகிறது. பூமிக்கு மிக அருகில் வருவதால், வழக்கமான முழுநிலவை விட பிரம்மாண்டமாக பிரகாசித்து வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களும், தங்களது போன்களில் போட்டோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதன்பிறகு 2042 வரை இவ்வளவு நெருக்கமாக நிலவை பார்க்க முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


