News January 9, 2025

புலிகேசி படமாக மாறிய சட்டப்பேரவை: அண்ணாமலை

image

தற்போது நடந்து வரும் தமிழக சட்டப்பேரவை, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தைப் பார்ப்பது போல் இருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடிவேலுவைப் போலவே முதல்வரை புகழ்வதில் ஒவ்வொருவருக்கும் இடையே போட்டி இருப்பதாகவும், வடிவேலுவின் இடத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிடித்துவிட்டதாகவும் கலாய்த்துள்ளார்.

Similar News

News January 20, 2026

விமான கட்டணம் உயர்வு: நோட்டீஸ் அனுப்பிய SC

image

பண்டிகைக் காலங்களில் விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி பயணிகளைச் சுரண்டுவதாக SC கருத்து தெரிவித்துள்ளது. தனியார் விமான நிறுவனங்களின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த கட்டண உயர்வு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் DGCA-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News January 20, 2026

ஜெயகாந்தன் பொன்மொழிகள்

image

*யாரைப் பற்றி நினைக்கும்போது மனதிற்கு இன்பமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள். *நான் ஒருபோதும் எதையும் அவமானமாகக் கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம். *ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும். *சுயவிமர்சனம் உடையோரை, பிற விமர்சனங்கள் பாதிப்பதில்லை. *தன்னை விட தன் திறமை மதிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது சுயமரியாதை, கர்வம் அல்ல.

News January 20, 2026

Sports 360°: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

image

*SAFF ஃபுட்ஸல் சாம்பியன்ஷிப்பில், இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது *ஆசிய மகளிர் ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் பிப்.22-ல் தாய்லாந்தில் தொடங்குகிறது *சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பஞ்சாப் அணிக்காக சுப்மன் கில் விளையாடுவார் என தகவல் *T20 உலகக் கோப்பை தொடரின், முதல் சில போட்டிகளில் பேட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் என அறிவிப்பு

error: Content is protected !!