News March 4, 2025
சீமானுக்கு நிம்மதி பரிசளித்த அந்த வழக்கறிஞர்

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சீமான் தரப்பு வழக்கறிஞர் நிர்ணிமேஷ் துபே. அதிக கட்டணம் வசூலிக்கும் துபே, வட இந்தியாவின் பேமஸான வழக்கறிஞர்களில் ஒருவர். ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமின் வாங்கிக் கொடுத்தவர். பாஜகவிற்காக பல வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டவர்.
Similar News
News November 11, 2025
முதுகுவலியை தவிர்க்க… இதை செய்யுங்க!

இன்று முதுகுவலி ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, தசை இறுக்கம், நீண்ட பயணம், கனமான பையை சுமப்பது உள்ளிட்டவை இதற்கு காரணமாகலாம். இதை தவிர்க்க, 30 mins-க்கு ஒருமுறை, உட்கார்ந்த இடத்திலிருந்தே முடிந்தவரை திரும்புதல், நேராக உட்காருதல், அடிக்கடி எழுந்து உட்காருவது, நடைபயிற்சி போன்றவற்றை செய்யலாம். தரையில் பாயில் படுத்து உறங்குவது பெரும்பாலான முதுகுவலிகளை குணப்படுத்திவிடும்.
News November 11, 2025
ராசி பலன்கள் (11.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 11, 2025
தம்பதியரே, இந்த விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க…

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்னைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும், தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் உடல் செயல்திறனும் குறையக்கூடும்.


