News December 30, 2024
வெடித்த விமானத்தில் இருந்து வந்த கடைசி SMS

தென் கொரியாவின் முவான் நகரில் நேற்று தரையிறங்க முயன்ற Jeju AIr விமானம் சுவற்றில் மோதி வெடித்தது. இந்த விபத்திற்கு முன் பயணி ஒருவர் குடும்ப உறுப்பினர்களுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில், விமானத்தின் மீது பறவை மோதிவிட்டதாகவும் ”எனது கடைசி வார்த்தைகளை அனுப்பவா?” என்றும் தெரிவித்திருக்கிறார். அதன்பின் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
Similar News
News March 5, 2026
போர் பதற்றம்.. தொடரை தள்ளிவைத்த ICC!

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக, நேபாளத்தின் கீர்திபூரில் நடைபெற இருந்த ODI WC லீக்-2 தொடரின் 6 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ODI உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்காக நடத்தப்படும் இந்த தொடரில் நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோத இருந்தன. தொடர் நடைபெறும் புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ICC அறிவித்துள்ளது.
News March 5, 2026
விஜய்யுடன் யார் பேசுனா? செல்வப்பெருந்தகை

விஜய்யுடன் யாரும் கூட்டணி குறித்து பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதேநேரம், வேறு யாரேனும் தனிப்பட்டு பேசியிருந்தால், அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். திமுக – காங்., தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது கூடுதலாக 3 + 1 தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
UPDATE: தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியானது

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியின் பதவிக்காலம் மே 10 உடன் முடிவடைகிறது. இந்நிலையில், 2026 தேர்தல் பணிகளை CEC குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இறுதியாக, மேற்கு வங்கத்தில் மார்ச் 9 – 10-ல் நடைபெறுகிறது. இதனால் மார்ச் 10-க்கு பிறகு தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும், குறிப்பாக மார்ச் 13-ல் தேர்தல் தேதி அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


