News March 20, 2025
கடைசி ‘லெஜெண்ட்’ வீரர் காலமானார்

2-ம் உலகப் போரின் மகத்தான விமானப்படை வீரன் என்ற புகழ்பெற்ற ஜான் பேடி ஹெமிங்வே, தனது 105-வது வயதில் காலமானார். 1941-ல் ஹிட்லரின் படை பிரிட்டன் மீது பெருந்தாக்குதல் நடத்திய போது, பிரிட்டனின் விமானப்படையே (RAF) அதை தடுத்து நிறுத்தியது. அதில் முக்கிய பங்காற்றியவர் ஜான் பேடி. தொடர்ந்து பல போர்முனைகளில் இவர் பங்காற்றியுள்ளார், பலமுறை இவரது விமானம் சுடப்பட்டும் தப்பிப் பிழைத்துள்ளார்.
Similar News
News September 17, 2025
கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் (செ. 19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10-மணி முதல் 1-மணி வரை நடைபெற உள்ளது. ஆர்டிஓ அலுவலகம் எதிரில்- மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், நடைபெறும். 10,+2, ஐடிஐ டிப்ளமோ டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News September 17, 2025
MGR-ன் இலக்கில் நாங்கள்: நயினார்

தமிழக பாஜகவின் குழு கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான பிரச்னைகள் பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும், கூட்டணி தொடர்பான எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக இருக்கக்கூடாது என்ற MGR-ன் எண்ணத்தையே அனைத்து எதிர்கட்சிகளும் நினைப்பதாகவும், அதற்கான வேலையில் NDA கூட்டணி இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 17, 2025
Netflix தளத்தில் இருந்து குட் பேட் அக்லி படம் நீக்கம்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில், இளையராஜாவின் இசையில் உருவான 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதை தன் அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி ராஜா தொடர்ந்த வழக்கில், பாடல்களை பயன்படுத்த HC இடைக்கால தடை விதித்தது. ஆனாலும் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டதால், தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், Netflix தளத்தில் இருந்து GBU படம் நீக்கப்பட்டுள்ளது.