News April 20, 2025
அதிமுகவுக்கே ராஜ்ஜியம்: ஆர்.பி.உதயகுமார்

2026 தேர்தலில் திமுகவுக்கு பூஜ்ஜியமும், அதிமுகவுக்கு ராஜ்ஜியமும் கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியை சந்திக்கும் என CM ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அவர் இந்த பதிலை கொடுத்துள்ளார். திமுகவால் இந்த கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
திமுகவில் இணையும் மல்லை சத்யா?

துரை வைகோ உடனான மோதலைத் தொடர்ந்து, மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நீக்கி வைகோ உத்தரவிட்டுள்ளார். பெரியார், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சத்யா, உட்கட்சி மோதல் வெடித்தபோதும், வைகோவை ‘தலைவர்’! என்றே குறிப்பிட்டு வந்தார். தற்போது கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளதால், அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
News August 20, 2025
கூலி படத்தில் 4 நிமிட காட்சிகள் நீக்கம்

கூலி படத்திலிருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் கூலி திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு இருக்கிறது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் படத்தில் இருந்து கட் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சிங்கப்பூரில் பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்க தணிக்கை சான்றிதழ் தரப்பட்டுள்ளது. தமிழகத்திலும் U/A சான்று கேட்டு தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. U/A கிடைக்குமா ?
News August 20, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪<<17461153>>மதிமுகவில் <<>>இருந்து மல்லை சத்யா நீக்கம்.. வைகோ அதிரடி
✪<<17461017>>டெல்லியில் <<>>பரபரப்பு.. CM ரேகா குப்தாவுக்கு ‘பளார்’
✪<<17460797>>தங்கம் <<>>விலை மேலும் ₹2,120 சரிவு
✪ஆப்கானிஸ்தானில் <<17459844>>பஸ்<<>> விபத்து.. உடல் கருகி 71 பேர் பலி
✪அணியில் <<17459234>>ஷ்ரேயஸ் <<>>இல்லாதது அநியாயம்.. அஸ்வின் சாடல்