News March 31, 2024
பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரிட்டன் மன்னர்!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் விண்ட்சர் அரண்மனையில் நடைபெற்ற ஈஸ்டர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிப்ரவரியில் சார்லஸ் புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்காலிகமாக ஓய்வில் இருந்து வந்த சார்லஸ், புற்றுநோய் பாதிப்புக்கு பின்னர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
Similar News
News April 19, 2025
மார்டனாகும் மெட்ராஸ்: ஜூன் முதல் மின்சார பஸ்!

சென்னையில் ஜூன் மாதம் முதல் 100 மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சார்ஜர் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
News April 19, 2025
பாமக- தவெக கூட்டணி பேச்சு.. யார் CM?

விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவர் ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் CM பதவியை ராமதாஸ் கேட்க, துணை முதல்வர் பதவிக்கு விஜய் தரப்பு ஓகே சொல்லி இருக்கிறதாம். ஆனால், CM பதவியில் ராமதாஸ் உறுதியாக நிற்க, விஜய்யிடம் தெளிவான பதில் பெற்று வாருங்கள், கூட்டணி பேசி முடிக்கலாம் என அவர் கூறியுள்ளாராம்.
News April 19, 2025
தொழில்முனைவோரை ஊக்குவிக்க 5 அறிவிப்புகள்

தொழில்முனைவோரை ஊக்குவிக்க 5 புதிய அறிவிப்புகளை CM வெளியிட்டார். புவிசார் குறியீடு மானியம் ₹1 லட்சமாக உயர்த்தப்படும். அம்பத்தூரில் உலோகவியல் ஆய்வகங்கள் ₹5 கோடியில் அமைக்கப்படும். காஞ்சிபுரம், பழந்தண்டலத்தில் ₹5 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள். காக்கலூர் தொழிற்பேட்டையில் ₹3.90 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க ₹2 லட்சம் என அறிவிப்புகளை வெளியிட்டார்.