News April 5, 2024
மீண்டும் வெடிக்கிறது தி கேரளா ஸ்டோரி சர்ச்சை

கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு தொலைக்காட்சியை பாஜக, ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிரசார இயந்திரமாக பயன்படுத்தக் கூடாது. வெறுப்பை விதைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது என அவர் தெரிவித்துள்ளார். இப்படம் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
Similar News
News January 10, 2026
அயோத்தி ராமர் கோயிலில் இஸ்லாமியர் தொழுகை

அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் உள்ள சீதா ரசோய் பகுதியில், காஷ்மீரை சேர்ந்த அபு முகமது ஷேக் என்ற இஸ்லாமியர் தொழுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, நாரேஎதக்பீர், அல்லாஹு அக்பர் போன்ற மத ரீதியான கோஷங்களை எழுப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
News January 10, 2026
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

ஜன.15, வியாழனன்று பொங்கல் பண்டிகை வருவதால், 4 நாள்கள் தொடர் விடுமுறை என்பது அனைவரும் அறிந்ததே. ஜனவரியிலேயே கூடுதல் சர்ப்ரைஸாக, மற்றொரு தொடர் விடுமுறையும் வருகிறது. அதாவது, ஜன.26, திங்களன்று குடியரசு தினம் கொண்டாடப்பட இருப்பதால், சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து 3 நாள்கள் லீவுதான். இதையொட்டி, அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளதால் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க திட்டமிடுங்கள்!
News January 10, 2026
1.75 கோடி Insta பயனர்களின் தரவுகள் கசிந்ததா?

சுமார் 1.75 கோடி இன்ஸ்டாகிராம் பயனர்களின் முக்கியமான தரவுகள் கசிந்துள்ளதாக சைபர் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பயனர்களின் பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவை டார்க் வெப்பில் விற்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த தரவு கசிவால், ஹேக்கர்கள் பயனர்களின் விவரங்களை தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். மேலும், பயனர்கள் பாஸ்வேர்டை மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


