News June 27, 2024
கென்ய அதிபர் பின் வாங்கினார்

கென்யாவில் வரிகளை உயர்த்தும் மசோதா, கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டது. இந்தியர்கள் அவசிய தேவைகளின்றி வெளியில் வரவேண்டாம் என இந்திய தூதரகமும் கேட்டுக் கொண்டது. பலர் உயிரிழந்த நிலையில், சர்ச்சைக்குரிய மசோதாவை திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
குமரி: தண்டவாளத்தில் தலை வைத்து மாணவர் தற்கொலை

தக்கலை அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதி ரயில் டிரைவர் கொடுத்த தகவல் அடிப்படையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விசாரணையில், உயிரிழந்த இளைஞர், வேளாங்கோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் பவித்ரன்(18) என்பதும், அவர் நாகர்கோவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் விசாரணை.
News December 6, 2025
உணவு விஷயத்தில் இந்த தவறு வேண்டாம்.. ஆபத்து!

நார்ச்சத்து, புரதம் இருக்கும் உணவுகளை சாப்பிட்டாலும் சோர்வாகவே உணர்கிறீர்களா? இதற்கு நீங்கள் சாப்பிடும் முறை காரணமாக இருக்கலாம். உணவை வேக வேகமாக மென்று விழுங்காதீங்க. இப்படி செய்தால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராது. அத்துடன் சுகர், இதய பிரச்னை, அஜீரணம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால் எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும் பிரயோஜனம் இல்லை. எனவே, உணவை பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். SHARE.
News December 6, 2025
இன்று ரேஸில் வெல்வாரா அஜித்குமார்?

மலேசியாவில் இன்று நடைபெறும் Michelin 12H கார் ரேஸிங்கில் அஜித்குமார் களமிறங்கவுள்ளார். இந்த ஆண்டில் ரேஸிங்கிலேயே முழுக்கவனமும் செலுத்தி வரும் அஜித், சில போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், இன்றைய போட்டியிலும் அஜித் வெற்றி பெற வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இதனிடையே, ரேஸ் களத்தில் அஜித்தின் போட்டோஸ் வெளியாகி வைரலாகிறது.


