News August 31, 2025
தெருநாய்கள் வழக்கால் உலக ஃபேமஸ் ஆன நீதிபதி

தெரு நாய்களின் வழக்கில் தீர்ப்பு வழங்கியதற்காக நான் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை தனக்கு ஒதுக்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்க்கு அவர் நன்றியும் கூறியுள்ளார். முன்னதாக, தெருநாய்களை பிடித்து ஊசி போட்டுவிட்டு மீண்டும் நாய்களை பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என அவர் தீர்ப்பளித்திருந்தார்.
Similar News
News September 3, 2025
கேன்சர் ஏற்படும் அபாயம்; Nail Polish-ஐ தடை செய்த அரசு!

பெண்கள் பயன்படுத்தும் Gel Nail Polish, கருவுறுதல் பிரச்னை, கேன்சர் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? Gel NailPolish-ல் உள்ள TPO எனும் நச்சுப்பொருள் பெண்களுக்கு இப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறதாம். இதனால் சலூன்களில் உள்ள TPO கலந்த Gel Nailpolish-ஐ ஐரோப்பா தடை விதித்துள்ளது. இந்தியாவிலும் சலூன்களில் இந்த Nail Polish-கள் இருப்பதால் பெண்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
News September 3, 2025
10% கமிஷன் வாங்கும் அமைச்சர்: இபிஎஸ் அட்டாக்

எங்கு பத்திரப்பதிவு நடந்தாலும் அமைச்சர் மூர்த்தி 10% கமிஷன் வாங்குவதாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில் EPS பேசியுள்ளார். பத்திரப் பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை நடைபெறுகிறது என மக்கள் பேசுவதாக கூறிய அவர், அமைச்சருக்கு கமிஷன் கொடுக்காவிட்டால் சொத்தை பதிவு செய்ய முடியாது எனவும் அந்தளவு அவல ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News September 3, 2025
தவெக – காங்., கூட்டணி? செல்வப்பெருந்தகை மறுப்பு

2026 தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய கூட்டணியை அமைக்கும் முனைப்பில் தவெக ஈடுபட்டு வருகிறது. இதற்காக தவெக – காங்., இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படியான எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது பற்றி யாரும் தவெகவில் இருந்து பேசவில்லை என்ற அவர், காங்.,ன் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.