News April 8, 2025
அம்பேத்கரின் கூற்றை வாசித்து தீர்ப்பளித்த நீதிபதி

கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். TN அரசுக்கும், கவர்னருக்குமான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பர்திவாலா, அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி தீர்ப்பை நிறைவு செய்துள்ளார். அந்த மேற்கோள் இதுதான், ‘‘அரசியலமைப்பு சிறப்பாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாகவே இருக்கும்’’.
Similar News
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: கடனை திருப்பி கேட்டவருக்கு கொலை மிரட்டல்

சவேரியார்பாளையத்தை சேர்ந்த சார்லஸிடம், நந்தன் கடனாக ரூ.3,51,300 வாங்கிவிட்டு அதில் ரூ.1,46,500 மட்டும் திரும்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்ட போது நந்தன் மற்றும் அவரது மனைவி ஜோஸ்பின் மேரி இருவரும் சார்லசை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் நேற்று (நவ.21) வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News November 21, 2025
ஆப்கன் எல்லையில் பாக்., தாக்குதல்: 23 பேர் பலி

PAK-AFG இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆப்கன் எல்லைக்கு அருகே இரண்டு தனித்தனி தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. குர்ரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட TTP குழுவை சேர்ந்தவர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.
News November 21, 2025
குளிர்காலத்தில் இத கண்டிப்பா சாப்பிடுங்க!

குளிர்காலத்தில் உடல் மந்தமாக இருக்கும். எனவே, ஆற்றலை அதிகரிக்க சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதில் முக்கியமான ஒன்று வேர்க்கடலை என்கின்றனர் டாக்டர்கள் *இதில், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. *குடலுக்கு நல்லது. *எலும்புகளை வலுப்படுத்துகிறது. *கொலஸ்ட்ரால், சுகர் அளவை கட்டுப்படுத்தும். *சரும பாதுகாப்பு, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.


