News August 6, 2024
மீனவர் விவகாரத்தை அரசியல் பிரச்னையாக பார்க்கக் கூடாது!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், “தமிழக மீனவர்கள் சங்கத்தினர் பிரச்னைகளை விளக்கி கூறினார். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் & கைது நடவடிக்கை அரசியல் பிரச்னையாக பார்க்கக் கூடாது. அது வாழ்வாதாரம் & தொழில் சார்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 5, 2026
IPL டாஸ்: ஹைதராபாத் அணி பேட்டிங்

SRH-க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற LSG பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. SRH அணியில் ஹர்ஷல் படேல் மற்றும் லிவிஸ்டன் இணைந்துள்ளனர். அதேபோல், LSG அணியில் நோர்க்யாவுக்கு பதில் மணிமாறன் சித்தார்த் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. இதில் 4 முறை LSG அணி வெற்றி பெற்றுள்ளது.
News April 5, 2026
அந்த வேதனை இருக்கே வேதனை.. என்னன்னு பாருங்க

நம்மூரைத் தாண்டி வேறு சில ஊர்களில் சால்னாவுக்கு தனி காசு கேட்டாலே நமக்கு கோபம் வரும். இங்கோ ‘Chilly dusted gold fingers’ என்ற பெயரில், பெட்டிக்கடைகளில் விற்கும் குடல் அப்பளத்தை ஒருவர் ₹150 கொடுத்து வாங்கியுள்ளார். ‘என் வம்சத்தில் அப்பளத்தை ₹150 கொடுத்து வாங்கிய முதல் ஆள் நான்தான்’ என்றும் தனது வேதனையை அவர் SM-ல் கொட்டி தீர்த்துள்ளார். என்னவென்று நினைத்து இந்த பொருளை அவர் ஆர்டர் செய்திருப்பார்?
News April 5, 2026
விஜய் மனசுல பாஜக தான் இருக்கு: குஷ்பு

புதுச்சேரியில் தவெக வேட்பாளருக்கு பதில் பாஜக வேட்பாளருக்கு <<19565066>>விஜய் வாய் தவறி<<>> வாக்கு கேட்டார். இந்த வீடியோ SM-ல் வைரலான நிலையில் பலரும் அவரை டிரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், யாருக்கு வாக்கு சேகரிக்கிறோம் என்று தெரியாமல் தங்கள் கட்சி வேட்பாளர் பெயரை அவர் சொல்லியுள்ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். மேலும் விஜய் மனதில் பாஜகதான் இருக்கு; அது மட்டும் உறுதி என்றும் கூறியுள்ளார்.


