News May 26, 2024
IPL திருவிழா இன்றோடு முடிகிறது

மார்ச் 22ஆம் தேதி தொடங்கி 2 மாதங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்த ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவு பெறுகிறது. பல திருப்பங்களுக்குப் பின் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் இன்று இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன. இத்தொடரில் சென்னை, மும்பை அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும், தொடரை வெல்ல தகுதியான அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவதாக ரசிகர்கள் திருப்தி தெரிவிக்கின்றனர்.
Similar News
News March 5, 2026
முன் விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் அஜித். இவர் சம்பவத்தன்று வினோ என்பவர் பைக்கில் அதிக ஒளி எழுப்பி சென்றுள்ளார். இதை அஜித் மற்றும் அவரது தந்தை அனந்தகுமார் கண்டித்தனர். இதில் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த அஜித்தை வழிமறித்து வினோ மற்றும் அருள் ராஜன் ஆகியோர் தாக்கி பைக்கை பறித்துள்ளனர். இது குறித்த புகாரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News March 5, 2026
யூரியா உற்பத்தி குறைந்தது.. விலை உயருமா?

மத்திய கிழக்கில் நடந்த போர் காரணமாக கத்தாரில் LNG உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் யூரியா உற்பத்தியை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. LNG எரிசக்திக்கு மட்டுமல்லாமல், யூரியா உற்பத்திக்கும் முதன்மை மூலப்பொருளாக உள்ளது. யூரியா பற்றாக்குறை ஏற்பட்டால், விலைகள் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உர அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
News March 5, 2026
OMG! ரொம்ப நேரம் உட்கார்ந்தா, இப்படி ஒரு ஆபத்தா…

அலுவலகமோ வீடோ, நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்வதால் பல்வேறு நோய்கள் வரும் என்கின்றனர் டாக்டர்கள்: *உடல்பருமன் *இதயநோய் & சில வகை புற்றுநோய்கள் *ரத்த சர்க்கரை *தொப்பை & இடுப்பை சுற்றி கொழுப்பு சேர்வது *முதுகு-கழுத்து வலி *தொடை தசைகள் பலவீனமாதல் *ஜீரண பிரச்சனை போன்றவை ஏற்படலாம். இவற்றை தவிர்க்க 30 mins-க்கு ஒருமுறை எழுந்து நடக்கலாம், எளிதான உடற்பயிற்சிகள் (வாரம் 150 mins) அவசியம்.


