News March 15, 2025
இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்

கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது ஐபிஎல் 2025 தொடர். வருகிற 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் 23ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Similar News
News April 2, 2026
அதிமுகவுக்கு தாவிய தவெகவினர்

தவெகவின் தலைமை மீதான அதிருப்தியில் அக்கட்சியை சேர்ந்த 25-க்கும் அதிகமான நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பொருளாளா் ADS சுரேஷ், துணை செயலாளர் சசிகலா, உள்ளிட்டோர் தவெகவில் இருந்து விலகி, ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மா.செ., சுகுமார் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நேரத்தில், தவெகவினர் அதிமுகவில் இணைந்ததால் தவெக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
News April 2, 2026
தவெக, நாதகவை கண்டுகொள்ளாத ஸ்டாலின்

தேர்தல் பிரசாரங்களில் பாஜக, அதிமுகவை கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின், தவெக & நாதக பற்றி பேசுவதை தவிர்க்கிறார். அக்கட்சிகளின் தலைவர்களான விஜய்யும், சீமானும் தன்னை பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றி ஸ்டாலின் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. போட்டியிலேயே இல்லாத அவர்களை பற்றிப் பேசி பெரிய ஆளாக்கிட வேண்டாம் என ஸ்டாலின் எண்ணுவதாகவும், இது சாதுர்யமான நகர்வு என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News April 2, 2026
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

*நிலத்தை பண்படுத்தும் உழவனிடமும், கல்லுடைக்கும் தொழிலாளியிடமும் இறைவன் இருக்கிறான் *பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வில் இசை என்பது பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது *மனித உறவுகள் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு எனும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுகமானதாக இருக்கும்.


