News February 16, 2025
ஐஃபோன் புது லுக்.. எப்படி இருக்கு?

பிரிமீயம் மொபைல் வடிவமைப்பாளரான ஆப்பிளின் புது சீரிஸ் iPhone 17 இப்படித்தான் இருக்கும் என பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. செப். 2025இல் நடக்கும் அறிமுக விழாவுக்கு இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், புது சீரிஸ் போனில் சிம் ட்ரே இருக்காது எனவும் 5G சிப் உடன் போன் வரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல புதிதாக Air என்கிற வெர்சனும் அறிமுகமாகலாம்.
Similar News
News November 14, 2025
Cinema 360°: ‘கும்கி 2’ படத்திற்கு U சான்று

*’கும்கி 2′ படத்திற்கு U சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *விதார்த்தின் ‘மருதம்’ சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிப்பு. *பிரபாஸின் Spirit ஷூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என அறிவிப்பு. *மம்மூட்டியின் ‘களம்காவல்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
News November 14, 2025
ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. எப்போது தெரியுமா?

2026 IPL சீசனுக்கான வீரர்கள் ஏலம், வரும் டிச.16-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை மினி ஏலம் என்பதால், ஒரே நாளில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தக்கவைத்த வீரர்களின் விவரம் இன்னும் 2 நாள்களில் வெளியான பிறகு, ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். வீரர்கள் விடுவிப்பு தொகையுடன் கூடுதலாக ₹5 கோடி வரை ஒவ்வொரு அணியும் ஏலத்தில் செலவு செய்யலாம்.
News November 14, 2025
வீட்டோடு மாப்பிள்ளையாகவும் தயார்.. சரத் பவாருக்கு கடிதம்

90s கிட்ஸ்களுக்கு திருமணம் நடப்பதே போராட்டமாக உள்ளது என்பதற்கு இச்சம்பவமும் உதாரணம். 34 வயதாகும் தனக்கு இனியும் திருமணம் நடக்கும் என்று தோன்றவில்லை, வீட்டோடு மாப்பிள்ளையாகவும் தயார் என, மஹாராஷ்டிரா இளைஞர் ஒருவர், சரத் பவாருக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளார். தன்னைப் போல் விவசாயம் செய்துவரும் இளைஞர்களை திருமணம் செய்துகொள்ள பெண் வீட்டார் முன்வரவில்லை என்றும் அவர் வேதனைப்பட தெரிவித்துள்ளார்.


