News September 29, 2025

கரூரில் 2-வது நாளாக தொடரும் விசாரணை

image

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக கரூரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், இன்று உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுடைய உறவினர்களிடம் கூட்டத்திற்கு சென்ற நேரம், தொடர்புகொள்ள முடிந்ததா உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும், அவருக்கு உதவ 5 பேர் கொண்ட குழுவினர் இதர தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

Similar News

News September 29, 2025

கரூர் துயரம் நடந்தது எப்படி? முதல் முறையாக வெளியானது

image

கரூரில் 41 உயிர்கள் பறிபோன சம்பவத்தில் காவல்துறையினர் FIR-ல் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாரம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் சாலைக்கு அருகில் உள்ள கடைகளின் தகர கொட்டகை மற்றும் மரங்களில் கட்சி தொண்டர்கள் அமர்ந்திருந்தபோது பாரம் தாங்காமல் முறிந்து கீழே நின்றிருந்த மக்கள் மீது விழுந்ததால் நெரிசல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அப்பாவி மக்கள் 11 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

News September 29, 2025

கரூரில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது: மன்சூர் அலி கான்

image

சதி திட்டம் தீட்டி கரூர் துயரம் அரங்கேற்றப்பட்டு இருப்பதாக மன்சூர் அலி கான் குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்க்கு அதிகமாக கூட்டம் கூடும் என தெரிந்தும் குறுகலான இடத்தில் பரப்புரைக்கு அனுமதி அளிக்க காரணம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ள அவர், போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கரூர் துயரத்திற்கான தண்டனை உரியவர்களுக்கு இன்னும் 6 மாதத்தில் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

News September 29, 2025

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

image

இதய நலம் நமது வாழ்வின் அடிப்படையான பலம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நம் உடல்நலம் காக்கும் சில உணவுகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புகள் சேராமல் தடுக்கின்றன. இதேபோல், உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!