News October 15, 2025

தனிநபரை பலிகடா ஆக்குவது நோக்கம் அல்ல: CM ஸ்டாலின்

image

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழி சுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது அரசின் கடமை எனவும் கூறியுள்ளார். இதேபோல் இனி நடக்காமல் தடுக்க SC தீர்ப்பின் அடிப்படையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) அரசு வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News October 15, 2025

BREAKING: தவெக நிர்வாகிகளுக்கு ஜாமின்

image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இருவரும் கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ளனர். இதில், மதியழகனை, நீதிமன்ற அனுமதி பெற்று SIT குழு 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News October 15, 2025

கட்சியில் இணைந்தவுடன் பாடகிக்கு ஜாக்பாட்

image

பிஹார் சட்டமன்ற தேர்தலுக்கான, 12 பேர் கொண்ட 2-வது வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நேற்று கட்சியில் இணைந்த பிரபல பாடகி மைதிலி தாகூர், அலிநகர் தொகுதியில் பேட்டியிட உள்ளார். அதேபோல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ரா, பக்சர் தொகுதியில் போட்டியிடுகிறார். 71 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் நேற்று வெளியானது. பிஹாரில் கூட்டணி ஒப்பந்தத்தின்படி 101 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றது.

News October 15, 2025

இந்த தீபாவளியில் இவர்களை கொஞ்சம் கவனியுங்க!

image

நம்மில் பலருக்கும் தீபாவளி ஒரு கொண்டாட்டம். ஆனால், இவர்களை போன்றவர்களுக்கு அதுவும் ஒரு போராட்டம். நம்மை நம்பி, ரோட்டில் கடை போட்டு, ஒரு நாளாவது நிம்மதியாக சாப்பிட்டு, தூங்கி விட மாட்டோமா என ஏக்கத்தில் இருப்பவர்களை, நாம்தானே ஆதரிக்க வேண்டும். இந்த பதிவை ஷேர் பண்ணுங்க. அதே போல, ஷேர் மட்டும் பண்ணாமல், நீங்களும் இது போன்ற ஒரு கடையில் ஏதாவது ஒரு பொருளை வாங்குங்க. சிறு துளி பெருவெள்ளம் அல்லவா.

error: Content is protected !!