News November 24, 2024
கோலியின் சதத்திற்காக காத்திருந்த இந்திய அணி

பெர்த் டெஸ்டில் 2ஆவது இன்னிங்சில் இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட ரன் குவிந்தது. 600 ரன்கள் முன்னிலை பெற்றதும், நாளை காலையில் இந்திய அணி டிக்ளேர் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 533 ரன்கள் குவித்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்து, ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதாவது கோலி 30ஆவது சதத்தை பதிவு செய்யும் வரை காத்திருந்தது டிக்ளேர் செய்தது.
Similar News
News November 21, 2025
BREAKING: விஜய்க்கு பிரேமலதா ஆதரவு.. திடீர் திருப்பம்

நேற்று முளைத்த <<18343358>>காளான்கள்<<>> எல்லாம் CM ஆக ஆசைப்படுவதாக பிரேமலதா கூறியது விஜய்யை தான் என கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, தான் கூறியது விஜய்யை அல்ல என பிரேமலதா விளக்கமளித்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை தாங்கள் (தேமுதிக) கூத்தாடி என கூறவில்லை எனவும் விஜய்க்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக – தேமுதிக கூட்டணி உருவாகுமா?
News November 21, 2025
டைட்டானிக் கம்மலை நினைவிருக்கிறதா?

காதோரமாய் கன்னங்களை உரசும் சிறு முடிகளுக்கு மத்தியில் கம்மல் நடனமாடுவதை ரசிப்பதே தனி அழகு. அதிலும், சற்று தலையை திருப்பும்போது கம்மல் நடனமாடினால் அது பேரழகாக இருக்கும். அந்த பேரழகை அளித்து, பெண்களை மேலும் அழகாக்கியது தான் ‘டைட்டானிக் கம்மல்’. சற்று நீண்ட செயினின் இறுதியில் மிளிரும் கல்லைக் கொண்ட இந்த கம்மலை ரசிக்காதவர்களே கிடையாது. டைட்டானிக் கம்மலை பார்த்ததும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
News November 21, 2025
திமுகவின் டூல் கிட் விஜய்: அர்ஜுன் சம்பத்

விஜய் மீது திமுக நடவடிக்கை எடுக்க பயப்படுவதாக அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். கரூர் விவகாரத்தில் தவெகவுக்கும், CBI-க்கும் வெட்கமே இல்லை என்றும் சாடினார். மேலும் திமுகவின் டூல் கிட் விஜய் என குறிப்பிட்ட அவர், கமலை திமுக பயன்படுத்தியது போல், 2026 தேர்தலில் விஜய்யை திமுக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். முன்னதாக, தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி இந்து மக்கள் கட்சி ECI-ல் மனு அளித்துள்ளது.


