News August 2, 2024
இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் அமெரிக்க அணியுடன் மோதியது. இந்திய அணியின் தீரஜ் – அங்கிதா இணை, அமெரிக்காவின் கேசி – பிராடி இணையை எதிர்கொண்டது. இதில், 6-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவி பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
Similar News
News October 26, 2025
சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்

*நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் வானவில்லைக் காணமுடியாது. *இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை. நம் பிரச்சனைகள் கூட நிரந்தரமில்லை. *நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன், அதனால் நான் அழுவதை யாராலும் பார்க்க முடியாது. *உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.
News October 26, 2025
சாதியக் கொடுமையை பேசுவது எப்படி தவறு? அமீர்

‘பைசன்’ போன்ற படங்களின் சமூகத்தில் பிரச்னை உண்டு பண்ண நினைக்கிறீங்களா என மாரிசெல்வராஜை பார்த்து கேட்பது அபத்தமானது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். கண்ணுக்குத் தெரியாத சாமி, இல்லாத பேய் படங்களை எடுக்கும்போது, கண்ணுக்கு தெரியிற சாதியக் கொடுமையைப் பற்றி பேசுறது தப்புனு எப்படி கேள்வி கேக்குறீங்க என நிகழ்ச்சி ஒன்றில் அவர் கேட்டுள்ளார்.
News October 26, 2025
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு

தனியார் பல்கலை. திருத்த சட்ட முன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். புதிதாக தனியார் பல்கலைக்கழங்கள் தொடங்குவதற்கும் தற்போதுள்ள சில வழிமுறைகளை எளிமைப்படுத்தப்பட வேண்டு என்ற நோக்கத்திற்காக இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதேசமயம் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் நலன் எந்த வகையில் இதனால் பாதிக்காது எனவும் விளக்கியுள்ளார்.


