News October 24, 2024
இந்திய அணிக்கு தொடக்கமே தடுமாற்றம்

புனேவில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சௌதி பந்தில் 2 ரன்னுக்கு போல்டான கேப்டன் ரோஹித், இந்த முறையும் சௌதி பந்தில் ரன்கள் ஏதும் எடுக்காமல் போல்டானார். ஜெய்ஷ்வால் 6*, கில் 10* ரன்களுடன் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News November 20, 2025
அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குநர்கள்

சமீப ஆண்டுகளில், இந்திய சினிமாவில், நடிகர்களுக்கு இணையாக இயக்குநர்களும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதில், சிலர் தங்களது படைப்புகளுக்கு ஏற்ப சம்பளம் பெறுகின்றனர். அவர்களில், அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குநர்கள் யார், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 20, 2025
சபரிமலையில் குழந்தைகளை பாதுகாக்க VI Band அறிமுகம்

சபரிமலைக்கு குழந்தைகளை அழைத்துச் செல்பவர்களுக்கு நெரிசலால் கடும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் சபரிமலையில் குழந்தைகள் காணாமல் போனால் கண்டறிய கேரள போலீஸ், வோடபோன்-ஐடியா(VI) உடன் இணைந்து Safety Bands-ஐ கொண்டு வந்துள்ளது. இதனை VI கடைகள் அல்லது ஆன்லைனிலும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள டிஜிட்டல் குறியீட்டை வைத்து குழந்தைகள் காணாமல் போனால் எளிதாக கண்டுபிடிக்க முடியுமாம்.
News November 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 525
▶குறள்:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
▶பொருள்: வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.


