News January 19, 2025
CT-க்கான இந்திய அணி சிறப்பாக உள்ளது

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சிறப்பாக உள்ளதாக X-ல் ரசிகர்களுடன் உரையாடிய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார். அப்போது அவர், இது நல்ல அணி தான். 3 லீக் போட்டிகள், 2 நாக்-அவுட் போட்டிகள் என சிறிய தொடர் தான் என்றார். சச்சின், லாரா, கோலி இவர்களில் யார் பெஸ்ட் என ரசிகர்கள் கேட்க, ‘சச்சின்’ என பதிலளித்த பிரசாத், சச்சின், கபில்தேவ் இருவரும் நாட்டின் மிகச்சிறந்த வீரர்கள் என்றார்.
Similar News
News March 7, 2026
வேட்புமனுவை வாபஸ் வாங்கினார் சௌமியா

அன்புமணி ராஜ்யசபா எம்பியாக தேர்வாகவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை வாபஸ் வாங்கிய சௌமியா, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 7, 2026
ஈரான் போர்.. இந்தியாவில் இதன் விலை குறைகிறது

இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியில் 72% மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது அங்கே போர்ச்சூழல் நிலவுவதால் 2 லட்சம் டன் பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலிருந்து கப்பல்களில் கொண்டுசெல்லப்பட்ட மேலும் 2 லட்சம் டன் அரிசியும் பாதிவழியிலேயே நிற்கிறதாம். இதன் காரணமாக இந்தியாவில் அதன் விலை 7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் குறையலாம்.
News March 7, 2026
விலை உயராது.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹114.50-ம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹60-ம் உயர்ந்தது. சிலிண்டர் உயர்வால், டீ, காபி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டீ, காபிகளின் விலை உயராது என்று பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


