News August 10, 2024
காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹங்கேரி வீராங்கனை பெர்னாடெட் நாகியை 12 – 2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் நடைபெற உள்ள காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை ஐபெரி மெடெட் கைஸியை எதிர்கொள்கிறார்.
Similar News
News January 9, 2026
மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் CM: அன்புமணி

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 80% நிறைவேற்றியுள்ளதாக CM ஸ்டாலின் கூறுவது முற்றிலும் பொய் என அன்புமணி விமர்சித்துள்ளார். கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாயு மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கையில், ஒரு மாநிலத்தின் CM-ஆக இருப்பவர் மீண்டும் மீண்டும் பொய்களை கூறுவது, அவரது பதவிக்கு அழகல்ல என சாடியுள்ளார்.
News January 9, 2026
பொங்கல்.. ஆம்னி பஸ் டிக்கெட் விலை ₹4,000 வரை உயர்வு

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சாதாரண நாள்களில் சென்னை – நெல்லை செல்ல ₹1,800 வரை டிக்கெட் விலை இருக்கும் நிலையில், பொங்கல் பண்டிகை நாள்களில் ₹4,000 வரை உயர்ந்துள்ளது. சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் டபுள் மடங்காக உயர்ந்துள்ளது. நீங்க டிக்கெட் போட்டாச்சா?
News January 9, 2026
78 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு விநியோகம்: தமிழக அரசு

தமிழ்நாட்டில் இதுவரை 78,30,523 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு, ரொக்கப்பணம் ₹3,000 வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும், நேற்றும், இன்றும் பொங்கல் பணத்தை வாங்க முடியாதவர்கள், ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


