News December 4, 2024

அழிக்க முடியாத வடுவான “36”

image

2020இல் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் கோலி தலைமையிலான அப்போதைய இந்திய அணி 2ஆவது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்டது. இதனால் அப்போட்டியில் ஆஸி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இந்தியா எடுத்த மிகக்குறைந்த ஸ்கோர் இந்த 36 ரன்கள்தான். ஆஸிக்கு எதிராக பல வெற்றியை பதிவு செய்தபோதும் இந்த வடு மட்டும் அழிக்க முடியாததாகவே உள்ளது.

Similar News

News September 10, 2025

நேபாளத்துக்கு அடுத்து இந்தியா.. தேதி குறித்த ஜோதிடர்

image

2039-க்கு பிறகு இந்தியாவில் மக்களாட்சி முடிவுக்கு வரும் என ஜோதிடர் பிரஷாந்த் கினி கணித்துள்ளார். 2039-ல் பாஜக ஆட்சியை இழக்கும் எனவும், அதன்பிறகு நாட்டில் தேர்தலே நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, <<17664211>>நேபாளத்தில்<<>> போராட்டம் வெடித்து ஆட்சி கவிழும் என கடந்த 2023-ம் ஆண்டே கணித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் தான் பிரஷாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 10, 2025

நாட்டை விட்டு தப்பியோடிய தலைவர்கள்

image

இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் தற்போது சிறையிலும், நாட்டை விட்டு தப்பி ஓடியும், தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சி, மாணவர்களின் போராட்டங்கள் இத்தகைய தலைவர்களின் அரசியல் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளன. இதனால் தெற்காசிய நாடுகளின் புவிசார் அரசியலே பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளன. மேலே Swipe செய்து வீழ்ந்த தலைவர்களை தெரிந்துகொள்ளுங்கள்.

News September 10, 2025

நாளை கடைசி: ITI தேர்ச்சி போதும்.. 2,418 பணியிடங்கள்..!

image

மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2,418 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். ஃபிட்டர், கார்பெண்டர், பெயிண்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண்களுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 – 24 வயதிற்குள் இருப்பது அவசியம். விண்ணப்பக் கட்டணம் ₹100. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!