News January 21, 2025
IND வீரர்கள் பாவம்.. ENG கேப்டன் சொன்ன விஷயம்

வெளிநாட்டு மண்ணில் விளையாடப் போகும்போது குடும்பத்தினர் அருகில் இருப்பது நல்ல மனநிலையை கொடுக்கும் என ENG கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். நாம் நவீன உலகில் வாழ்ந்து வருகிறோம் எனவும், குடும்பம் அருகில் இருப்பது வீரர்களின் ஆட்டத்தை பாதிக்காது எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, IND வீரர்கள் வெளிநாடு பயணத்தின் போது குடும்பத்தினரை அழைத்து செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை BCCI விதித்திருந்தது.
Similar News
News March 17, 2026
வரலாற்றில் இன்று

➤1919 – ரெளலட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். ➤ 1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ‘கலிபோர்னியம்’ என்ற 98-வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். ➤1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர். ➤1925 – நடிகர் மேஜர் சுந்தரராஜன் பிறந்தநாள். ➤1990 – பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பிறந்தநாள்.
News March 17, 2026
புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக பாமக முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணியில் தங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை என அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றாலும் NDA கூட்டணிக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
News March 17, 2026
ஆப்கான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் காபுலில் உள்ள ஹாஸ்பிடல் மீது பாக் வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஆப்கான் குற்றம்சாட்டியுள்ளது. இதில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹாஸ்பிடல் மீது தாக்குதலை நடத்தவில்லை என பாக் மறுப்பு தெரிவித்துள்ளது.


