News April 14, 2024
5,563 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

2023-24 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உட்பட 5,563 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News November 22, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (நவ.22) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 22, 2025
இந்திய அரசு மீது மக்களுக்கு எவ்வளவு நம்பிக்கை தெரியுமா?

2025 எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டரின்படி, அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அளவிடும் உலகளாவிய கணக்கெடுப்பில், இந்தியா அசத்தியுள்ளது. இந்த பட்டியலில், எந்தெந்த நாடுகள் டாப் 8 இடங்களை பிடித்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
இதில் இந்தியா எந்த இடத்தில் இருக்கு என்று பாருங்க, கமெண்ட்ல சொல்லுங்க. SHARE
News November 22, 2025
பிக்பாஸ் எவிக்ஷன்: கெமிக்கு குட்பை

பிக்பாஸில் இந்த வார எலிமினேஷனாக கெமி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். கனி, வியானா, அரோரா, விக்ரம் உள்ளிட்ட 13 பேர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், குறைவான வாக்குகளை பெற்று கெமி எவிக்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவிக்ஷனில் இருந்து பிரஜின், வியானா தப்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரி உள்ளதாக கூறப்படுகிறது.


