News March 29, 2024
அந்த சம்பவத்திற்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை

மோடியின் சாலை பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, கோவை தனியார் பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பள்ளி குழந்தைகள் சாலை பேரணியில் பங்கேற்றதற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஏப்.3ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Similar News
News December 9, 2025
தமிழகத்தில் தவெகவுக்கு சிக்கல்: புஸ்ஸி ஆனந்த்

தமிழகத்தில் எல்லா வகையிலும் தவெக பரப்புரைக்கு சிக்கல் ஏற்படுத்துகின்றனர் என புஸ்ஸி ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய அவர், மற்ற கட்சிகள் புதுச்சேரியில் இவ்வளவு கூட்டத்தை கூட்டுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சிலவற்றை கொடுத்து உழைக்க வேண்டும் என கூறினார். தற்போது தளபதியின் (விஜய்) குடும்பமாகவே தொண்டர்கள் திரளாக வந்துள்ளதாகவும் கூறி நெகிழ்ந்தார்.
News December 9, 2025
யாரிடம் பிரிவினை உள்ளது? MP ஆ.ராசா

லோக்சபாவில் ‘வந்தே மாதரம்’ விவாதத்தின் போது, பிரிவினை குறித்து கூறும் PM, அது எங்கே உள்ளது, யாரிடம் உள்ளது? என்பதை விளக்க வேண்டும் என ஆ.ராசா தெரிவித்தார். வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு, இப்பாடல் அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
News December 9, 2025
‘ஏலியன் எலும்புக்கூடு’ பற்றி தெரியுமா?

சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனத்தில் 2003-ல், வெறும் அரை அடி கொண்ட எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அதன் தலை மட்டும் பெரிதாக வித்தியாசமாக இருந்ததால், அது ஏலியனின் எலும்புக்கூடு என வதந்தி பரவியது. ஆனால் சுமார் 15 வருட ஆய்வுக்கு பின் தான் தெரிந்தது, அது ஏலியன் அல்ல, ஒரு பெண் குழந்தையின் எலும்புக்கூடு என்று. 7 மரபணு குறைபாடுகளுடன் பிறந்து, குழந்தை இறந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


