News December 15, 2024

அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் கொடுத்த ஐடியா!

image

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த இபிஎஸ், அவரவர் மாவட்டங்களில் மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து நிர்வாகிகள் போராட்டத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மழை பாதிப்பு, வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட இன்னல்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கடந்த 43 மாதங்களில் 113 நாட்கள் மட்டுமே பேரவைக் கூட்டம் நடந்துள்ளதாகவும் கூறினார்.

Similar News

News March 9, 2026

மார்ச் 14-ல் பாஜக ஆட்சிமன்றக் குழுக்கூட்டம்

image

டெல்லியில் வரும் 14-ம் தேதி பாஜக ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பட்டியல், வேட்பாளர்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகின்றன. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிதின் நபின், வானதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

News March 9, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 சரிவு!

image

<<19333418>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியால் சென்னையில் தங்கம் விலை இன்று(மார்ச் 9) சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம், 1 கிராம் ₹14,950-க்கும், சவரன் ₹1,19,600-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹290-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,90,000-க்கும் விற்பனையாகிறது.

News March 9, 2026

‘ஜன நாயகன்’ படத்துக்கு இன்று முக்கியமான நாள்!

image

‘ஜன நாயகன்’ படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் இன்று ரிவைசிங் கமிட்டி படத்தை பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சுமுகமாக முடியும் பட்சத்தில் படம் மார்ச் 19-ல் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தினர் சொல்கின்றனர். இது விஜய்யின் கடைசி படம் என கூறப்படுவதால் தேர்தலுக்கு முன் படம் ரிலீசாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

error: Content is protected !!