News March 22, 2025
பிஞ்சுக் குழந்தையை சீரழித்த மனித மிருகம்

பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் என்றுதான் முடிவுக்கு வருமோ? மத்தியப் பிரதேசத்தில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தையை பக்கத்து வீட்டுக்காரர் ரேப் செய்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட குழந்தை அழுது கொண்டே நடந்தவற்றை தாயிடம் தெரிவித்துள்ளார். தாய் அளித்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற மனித மிருகங்களை என்ன செய்யலாம்?
Similar News
News March 23, 2025
பிரபல வீரர் காலமானார்

“Artist Artest” என்று அழைக்கப்படும் தொழில்முறை மல்யுத்த வீரரான கிரஹாம் கிரீன் அகால மரணமடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஒஹையோவில் Xtreme Valley Wrestling போட்டியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. அண்மையில் குத்துச்சண்டை லெஜெண்ட் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமான நிலையில், இது ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
News March 23, 2025
‘அச்சமில்லாத முயற்சி’… தியாகிகள் நாளில் PM உருக்கம்!

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள், தியாகிகள் தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, 3 பேரின் உயர்ந்த தியாகத்தை நாடு இன்று நினைவுகூர்வதாக குறிப்பிட்டுள்ளார். விடுதலை, நீதிக்கான அவர்களின் அச்சம் இல்லாத முயற்சி, அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 23, 2025
பஹ்ரைனை பொளந்து கட்டிய இந்தியா.. த்ரிலான வெற்றி

FIBA Men’s Asia Cup தகுதிச் சுற்றில் இந்திய அணி பஹ்ரைனை எதிர்கொண்டது. 15 ஆண்டுகளாக பஹ்ரைனிடம் தோல்வியை மட்டும் சந்தித்த இந்தியா, நேற்று வரலாற்றை மாற்றியது. முதல் பாதியில் 39-38 என்று முன்னிலை பெற்ற இந்தியா, 2ஆம் பாதியில் மேலும் அதிரடி காட்டியது. இறுதியில் 81-77 என த்ரிலிங்கான வெற்றி பெற்றது. இதன் மூலம் FIBA Men’s Asia Cupக்கு இந்திய முன்னேறியது.