News January 2, 2025
123 ஆண்டுகளில் இல்லாத வெப்ப ஆண்டு!

இந்தியாவில், கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத வெப்பம், 2024இல் பதிவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. 1901 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான பதிவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டுதான் அதிகப்படியான வெப்பம் பதிவான ஆண்டாக உள்ளது. வெப்பநிலை, இயல்பை விட 0.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகவும், சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை, நீண்ட கால சராசரியை விட இது 0.90 டிகிரி செல்சியஸ் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
WPL: அதிக விலைக்கு ஏலம் போன டாப் 7 வீராங்கனைகள்!

நேற்று நடைபெற்று முடிந்த WPL ஏலத்தில் அணிகள் பணத்தை கொட்டி வீராங்கனைகளை வாங்கியுள்ளன. ₹50 லட்சம் அடிப்படை விலை கொண்ட ஒரு வீராங்கனை ₹3.20 கோடிக்கு ஏலம் போனது தான் இன்று ஹாட்டாபிக். இது மட்டுமின்றி, இந்த ஏலத்தின் டாப் 7 ஒப்பந்தங்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். WPL தொடரில் உங்களின் ஃபேவரிட் வீராங்கனை யார்?
News November 28, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை இன்று(நவ.28) சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,840-க்கும், சவரன் ₹94,720-க்கும் விற்பனையாகிறது. <<18408962>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், நேற்று(₹240) போலவே இன்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய சந்தையில் சவரனுக்கு ₹560 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
News November 28, 2025
காட்டுப்பூனைகளுக்கு எதிராக போரா?

‘காட்டுப்பூனைகளுக்கு எதிராக போர்’. கேட்டாலே ஆச்சர்யமாக உள்ளதல்லவா? நியூசிலாந்தில் உள்ள அரியவகை உயிரினங்களை காட்டுப்பூனைகள் வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. எனவே, பூர்வீக உயிரினங்களை காக்க, 25 லட்சம் காட்டுப் பூனைகளை 2050-க்குள் ஒழிக்க போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவற்றை ‘கொடூர கொலையாளிகள்’ என அறிவித்துள்ள அரசு, நியூசிலாந்து ஒரு பெரிய சூழலியல் போருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.


