News December 28, 2024
இன்று தொடங்குகிறது ஹாக்கி திருவிழா!

தமிழ்நாடு டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஹாக்கி இந்தியா லீக்(HIL) தொடர் ஒடிஷாவில் உள்ள ரூர்கேலா நகரில் இன்று தொடங்குகிறது. ஐபிஎல் பாணியில் ஹாக்கி இந்தியா சார்பாக தொடங்கப்பட்ட இத்தொடர் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் 2017-ம் ஆண்டுக்கு பிறகு இத்தொடர் நடைபெறாத நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு நடைபெறுகிறது. தமிழ்நாடு அணி முதல் ஆட்டத்தில் Soorma Hockey Club நாளை சந்திக்கிறது.
Similar News
News March 26, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (26.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 26, 2026
தவெகவில் இணையும் MGR அதிமுக பொ.செ.,

மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த மாதம் MGR அதிமுகவை தொடங்கினார். இந்நிலையில், அக்கட்சியை விட்டு விலகுவதாக பொ.செ., ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார். கட்சியில் உள்ள தொண்டர்களின் நிலையை கருதி ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இவர், விரைவிலேயே தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
நடிகர் ராஜேந்திரன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

மலையாள நடிகர் EA ராஜேந்திரன்(71) இன்று காலமானார். பிரபல நடிகர் முகேஷ் மாதவனின் நெருங்கிய உறவினரான இவர், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். மீச மாதவன், கலியாட்டம், நரசிம்மம், சினேகம் உள்ளிட்ட படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ராஜேந்திரன், நீண்டகாலமாக உடல்பிரச்னையால் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், கொல்லத்தில் இன்று அவரது உயிர் பிரிந்தது. RIP


