News February 8, 2025

இருட்டுக் கடை அல்வாவின் வரலாறு

image

1900களில் வட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்ற நெல்லை சொக்கம்பட்டி ஜமீன், அங்கு அல்வா சாப்பிட்டுவிட்டு சுவையில் மயங்கி அந்த குடும்பத்தை நெல்லைக்கு அழைத்து வந்துவிட்டார். அக்குடும்பத்தைச் சேர்ந்த பிஜிலி சிங், 1940களில் நெல்லை இருட்டுக் கடையை நிறுவினார். அதன்பின், தலைமுறை தலைமுறையாக அவரது குடும்பத்தினர் அதே பாரம்பரியத்துடன் கடையை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 8, 2025

பட்ஜெட்டை வைத்து டெல்லியை பிடித்த பாஜக

image

டெல்லி தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கும் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் கடந்த வாரம் வெளியான பட்ஜெட் அறிவிப்பு தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதிகமான அரசு ஊழியர்கள் உள்ள டெல்லியில் 67.16% மக்கள் மிடில் கிளாஸ் வகுப்பினர். வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்ட அறிவிப்பானது, மிடில் கிளாஸ் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாஜக பக்கம் திருப்பியதாக சொல்கின்றனர்.

News February 8, 2025

பள்ளிகளில் மாணவர்கள் கவனம்

image

கடந்த சில நாள்களாக பள்ளிகள் குறித்தும் கல்லூரிகள் குறித்தும் வரும் செய்திகள் நல்லதாக இல்லை. ஆசிரியர்களே சிறுமிகளை, மாணவிகளை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குவது வேதனை தரும் விஷயமாக உள்ளது. இதனை தடுக்க, அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த அதிமுக வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், மாற்றம் ஆசிரியர்களிடம் இருந்துதானே வர வேண்டும்? உங்கள் கருத்தை சொல்லுங்க.

News February 8, 2025

ஆண்களே, இந்த 7 அறிகுறிகளை கவனிங்க!

image

இதயநோய் மரணங்களில் 85% மாரடைப்பு, ஸ்ட்ரோக் பாதிப்பால் நேர்கிறது. அதன் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்தால் ஆபத்தை தடுக்கலாம். அவை: *நெஞ்சு வலி / அசவுகரியம்: ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. வலியோ, இறுக்கமோ சில நிமிடங்கள் தாக்கலாம். தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை வரை பரவலாம் *மூச்சுத்திணறல் *உடலின் மேல்பாதியில் வலி *திடீரென அதிகப்படியான வியர்வை *குமட்டல்/ வாந்தி *தலைச்சுற்றல் *அசாதாரண சோர்வு.

error: Content is protected !!