News March 29, 2025
மும்பை அணிக்கு இமாலய இலக்கு…!

MI அணிக்கு 197 ரன்களை இலக்காக GT அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற MI பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, முதலில் பேட்டிங் செய்த GT அணி வீரர்கள் பவுண்டரிகளை பறக்கவிட்டனர். TN வீரர் சாய் சுதர்சன் அரைசதம் (63) விளாச, கில்(38), பட்லர்(39) உள்ளிட்ட வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். MI தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். யார் ஜெயிப்பாங்க?
Similar News
News January 16, 2026
சனாதன தர்மத்தில் வேரூன்றி நிற்கும் திருவள்ளுவர்: R.N.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, கவர்னர் RN ரவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவரது X-ல், வள்ளுவரின் ஆழமான ஞானம், பல நூற்றாண்டுகளாக பாரதத்தின் தார்மீக மற்றும் ஆன்மிக உணர்வுகளை வடிவமைத்துள்ளது. பாரதிய பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷமான திருக்குறள், சனாதன தர்மத்தின் நித்திய நெறிமுறைகளில் திடமாக வேரூன்றி, காலம் கடந்து நிற்கிறது என்று கூறியுள்ளார்.
News January 16, 2026
நடிகை கனகா சந்திப்பு.. புதிய அப்டேட்

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடி, <<18843012>>ராமராஜன்<<>>- கனகா சந்தித்த போட்டோ சமீபத்தில் வைரலானது. கனகாவை நீண்ட நாள்களாக பார்க்க வேண்டும் என நினைத்ததாக இந்த மீட்டிங் குறித்து ராமராஜன் தெரிவித்துள்ளார். இருவரும் பழைய விஷயங்கள் குறித்து பேசியதாகவும், அது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குண்டாகிவிட்டதாக வருத்தப்பட்ட கனகாவிடம் மனசுதான் முக்கியம் என கூறியதாகவும் ராமராஜன் பகிர்ந்து கொண்டார்.
News January 16, 2026
FLASH: பொங்கல் விடுமுறை.. கூடுதலாக ஒரு சிறப்பு ரயில்!

பொங்கல் விடுமுறைக்காக சிறப்பு ரயில்களை இயக்கிவரும் தெற்கு ரயில்வே நாகர்கோவில் – தாம்பரம் இடையே கூடுதலாக ஒரு ரயிலை(06160) அறிவித்துள்ளது. இது, ஜன.18-ம் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக திங்கட்கிழமை காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதற்கான டிக்கெட் புக்கிங் நாளை காலை 8 மணிக்கு <


