News March 26, 2025
நேற்றைய GTயின் ஹீரோக்கள் தமிழக வீரர்கள் தான்!

PBKS அணிக்கு எதிரான ஆட்டத்தில் GTல் தமிழக வீரர்களே சிறப்பாக செயல்பட்டனர். சாய் கிஷோர் 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல, 244 ரன்களை துரத்திய போது, 41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் சாய் சுதர்ஷன் 74 ரன்களை விளாசினார். அவர் இன்னும் கொஞ்சம் விளையாடி இருந்தால், GT வெற்றி பெற்று இருக்குமோ என்னவோ. யாரெல்லாம் இவர்களின் ஆட்டத்தை பாத்தீங்க!
Similar News
News March 26, 2025
பாஜகவுடன் கூட்டணியா? – மழுப்பிய இபிஎஸ்

அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்ற யூகத்தை அதிகரித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இபிஎஸ் நேரடியாக பதில் அளிக்கவில்லை. கூட்டணி அமையும்போது தங்களிடம் தெரிவிப்பேன் எனக் கூறிய அவர், ஒவ்வொரு கட்சியும் தேவைக்கு ஏற்ப கூட்டணி முடிவெடுக்கும் எனக் குறிப்பிட்டார். கூட்டணி அரசு அமையும் என்ற அமித்ஷாவின் பதிவு அவரது கட்சியின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
News March 26, 2025
அதிமுக கேட்ட கணக்கு இதுதான்…!

1972-ல் திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர், கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என திமுக பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். இது திமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதால், அவர் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததே அதிமுக என்ற கட்சி தோன்ற காரணமாக அமைந்தது.
News March 26, 2025
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை… கோர்ட் அதிரடி தீர்ப்பு

வரதட்சணை கொடுமையால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ? உ.பி.-யில் கர்ப்பிணியாக இருந்த சுமிதா என்பவரை, வரதட்சணை கேட்டு அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் சித்ரவதை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் சுமிதாவின் கழுத்தை நெரித்து அந்த கொலை செய்துள்ளனர். பெண்ணின் தந்தை தொடுத்த வழக்கில், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.