News March 26, 2025
நாயகன் மீண்டும் வர்றார்.. இந்தியா வரும் மெஸ்ஸி!

ஃபுட்பால் லெஜண்ட் மெஸ்ஸி வரும் அக்டோபரில் இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் நடைபெறும் 2 ஃப்ரண்ட்லி போட்டிகளில் அர்ஜெண்டினா அணியினருடன் மெஸ்ஸி விளையாட இருக்கிறார். இந்தியாவில் ஃபுட்பாலை பிரபலப்படுத்தும் நோக்கில், இந்த போட்டிகள் நடைபெறும் என அர்ஜெண்டினாவின் ஸ்பான்சரான HSBC தெரிவித்துள்ளது. மெஸ்ஸி கடைசியாக கடந்த 2011ல் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடினார்.
Similar News
News December 17, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 17, மார்கழி 2 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News December 17, 2025
மோடி ஒரு சிறந்த நண்பர்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவையும் PM மோடியையும் புகழ்ந்துள்ளார். இதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்வீட் செய்துள்ளது. அதில், ‘இந்தியா உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும். இது அற்புதமான நாடு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு முக்கியமான கூட்டு நாடு. PM மோடி எங்களுக்கு சிறந்த நண்பராக இருக்குறார்’ என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


