News March 25, 2025
‘துப்பாக்கி’ கொடுத்தவருடன் மோதும் ‘பராசக்தி’ ஹீரோ?

விஜய் அரசியலில் நுழைந்ததால் சினிமாவில் அவரது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துச் செல்லும் வகையில், கோட் படத்தில் ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்ற வசனம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன், பொங்கலை ஒட்டி 2026 ஜன.9-ல் வெளியாகிறது. அதே நேரத்தில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தையும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விஜய் உடனான மோதலை தவிர்ப்பாரா SK?
Similar News
News January 7, 2026
சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி நியூசிலாந்து தொடரில் மிகப்பெரிய சாதனை படைக்கவுள்ளார். அதாவது அவர் இன்னும் 25 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை குறைந்த இன்னிங்சில் எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். கோலி 3 வடிவங்களிலும் சேர்த்து 623 இன்னிங்ஸ்களில் 27,975 ரன்கள் எடுத்துள்ளார். 28,000 ரன் மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 644 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன.
News January 7, 2026
தவெகவில் அடுத்தடுத்து இணைந்தனர்

KAS வரவுக்கு பிறகு தவெக புதுபலம் பெற்றிருக்கிறது. அவர் நகர்த்தும் காய்களால்தான் திமுக, அதிமுக, பாஜகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தவெகவுக்கு வருகின்றனர். சேலம் Ex MLA பல்பாக்கி சி.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், புதுச்சேரி Ex பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர் அடுத்தடுத்து இணைந்தனர். இவர்களை தொடர்ந்து, வைத்திலிங்கம் (OPS), பெரியசாமி (அதிமுக) போன்ற பலரும் இணைவார்கள் என பேசப்படுகிறது.
News January 7, 2026
பொங்கல் பரிசு.. அரசு அதிகரித்தது

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ₹3,000 தொகையை உள்ளடக்கிய பொங்கல் தொகுப்பை வழங்கும் பணியை நாளை (ஜன.8) CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லாமல், தமிழகம் முழுவதும் ஜன.8 – 12 வரை பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜன.13 வரை ஒரு நாள் நீட்டித்து பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


