News August 7, 2024
ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர். காத்மாண்டு அருகே சென்றுகொண்டிருந்த சிறிய ரக ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நுவாகாட் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த கோர சம்பவத்தில் விமானி உள்பட அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 1, 2025
சமந்தா கல்யாணத்தில் இப்படி ஒரு ஸ்பெஷலா?

நடிகை சமந்தா, தயாரிப்பாளர் ராஜ் நிதிமோரு ஆகியோரின் திருமணம் ஈஷா மையத்தில் நடைபெற்றது. ‘பூதசுத்தி விவாஹா’ என்ற ஸ்பெஷலான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. லிங்க பைரவி சன்னிதியில் வைத்து பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, தம்பதியர் இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுவதே ‘பூதசுத்தி விவாஹா’ முறை. இது இருவர் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் என ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
நாளை பள்ளிகள் 4 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை(டிச.2) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே <<18440636>>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்<<>> ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புடன் இருங்கள் மக்களே!
News December 1, 2025
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்

கார்த்திகை திருநாளில்(டிச.3) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என மதுரை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. உச்சி பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் எழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். மலை உச்சியில் ஆய்வு செய்த ஜட்ஜ் G.R.சுவாமிநாதன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


