News October 10, 2025
தந்தை தொகுதியில் போட்டியிடும் வாரிசு?

தந்தை விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றிபெற்ற விருத்தாசலம் (அ) ரிஷிவந்தியம் தொகுதியில் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இதற்காகவே அவர் தரப்பில் மினி சர்வே நடத்தப்பட்டிருக்கிறதாம். இதில், விஜயகாந்துக்கு இப்போதும் தொகுதியில் செல்வாக்கு இருப்பதால், தனக்கும் அதில் பாதியாவது கிடைக்கும் என ரிசல்ட் வந்திருக்கிறதாம். தந்தை அளவுக்கு மகனால் சோபிக்க முடியுமா?
Similar News
News October 10, 2025
இருமல் சிரப் விவகாரம்: நாடு முழுவதும் சோதனை

இருமல் சிரப் குடித்த 24 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் <<17963280>>இருமல் சிரப்<<>> தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களிலும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரப்களை ஆய்வகங்களில் பரிசோதிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதேபோல், இத்தனை நாள்களாக ‘Coldrif’ சிரப்பை பரிசோதிக்காதது ஏன் என்று தமிழக உணவு & மருந்துகள் (TN FDA) அமைப்பிடமும் விளக்கம் கேட்டுள்ளது.
News October 10, 2025
EPS அதிமுகவை உள்வாடகைக்கு விட்டுள்ளார்: உதயநிதி

சமீப காலமாக, EPS-ஐ உதயநிதி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், EPS-க்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது என மீண்டும் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிமுகவை EPS வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறிய உதயநிதி, தற்போது அதை அவர் உள்வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் தோள் மீது ஏறி பாஜக சவாரி செய்துகொண்டே தமிழகத்தை ஆட்சி செய்ய முயல்வதாகவும் சாடினார்.
News October 10, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் பல பகுதிகளில் ஏற்கெனவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கையோடு குடையை எடுத்துச் செல்லுங்கள். SHARE IT.