News August 28, 2025

பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்

image

நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. மேலும், மதுரை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பூர், விருதுநகர், பெரம்பலூர், தஞ்சை, திருவள்ளூர், வேலூர், திருப்பூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், மழையின்போது பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

Similar News

News March 3, 2026

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.03) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 3, 2026

மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

image

OPS திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்து செஞ்சி வே. ஏழுமலையும் அதிமுகவில் இணைந்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்து அவர் மீண்டும் தாய் கழகம் திரும்பியுள்ளார். விழுப்புரம், தி.மலை மாவட்டங்களில் முக்கிய முகமாக அறியப்படும் ஏழுமலை, அதிமுக சார்பில் MP, MLA உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

News March 3, 2026

தப்பான கோணத்தில் போட்டோ எடுக்குறாங்க: ருக்மினி வசந்த்

image

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகைகளை தவறான கோணங்களில் போட்டோ எடுப்பதாக ருக்மினி வசந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். உடலை மட்டும் ஒரு பொருளாக கருதி Zoom செய்து எடுக்கப்பட்டு SM-ல் அவை பகிரப்படுகின்றன; திட்டமிட்டு ஒரு சில நபர்கள் செய்யும் இந்த செயல் அவமரியாதைக்குரியது & ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். அத்துடன் தாங்கள் கலைக்காக இருக்கிறோம், இப்படிப்பட்ட காட்சிகளுக்காக அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!