News March 26, 2025
மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News December 31, 2025
அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும்…

இந்தியா-பாக்., மோதலின் போது, 3-ம் தரப்பு மத்தியஸ்தம் நடைபெறவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆனால், தானே முன்னின்று தீர்த்து வைத்ததாக டிரம்ப் சொல்லி வருகிறார். தற்போது அவரைத்தொடர்ந்து சீனாவும் உரிமை கொண்டாடியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இரு நாடுகளுக்கும் இடையே பெய்ஜிங் மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளது விவாதத்தை எழுப்பியுள்ளது.

தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது

தங்கம் விலை இன்று (டிச.31), 22 கேரட் கிராமுக்கு ₹50 குறைந்து ₹12,550-க்கும், சவரனுக்கு ₹400 குறைந்து ₹1,00,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மேலும், <<18718427>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.