News March 16, 2024

தேர்தல் முடியும் வரை குறைதீர் கூட்டம் ரத்து

image

பாராளுமன்ற தேர்தல்-2024 தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பொதுமக்கள் மனுக்களை வழங்கிட ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று கூறினார்.

Similar News

News August 30, 2025

கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (30.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 30, 2025

கோவையில் தோஷம், கஷ்டங்களை நீக்கும் கோயில்!

image

கோவை பீளமேட்டில் புகழ்பெற்ற அஷ்டம்ச வரத ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வாமாக வீற்றிருக்கும் ஆஞ்சநேயரை, சனிக்கிழமை நாட்களில் சென்று வழிபட்டால், சனி தோஷங்கள் நீங்குவதோடு, கஷ்டங்கள் நீங்கி, தொழில் முன்னேற்றம் ஏற்படுமாம். திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஞ்சநேயரை வணங்கி, செந்தூரத்தை நெற்றியில் இட்டால் போதும், அனைத்து திருஷ்டியும் நீங்குமாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 30, 2025

வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் முதியவர் கைது!

image

கோவை சேர்ந்த 40 வயது நபர் பாப்பநாயக்கன்பாளையம் வழியே நேற்று நடந்த சென்றுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த முதியவர் தன்னிடம் அழகான இளம் பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் இருக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கன்னியாகுமரியை சேர்ந்த ராஜன்(70) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!